என் கவிதைகள் பிடிக்கும் என்றாய்..! நானும்- எழுதி வடித்து கவிதை மழையாகப் பொழிந்தேன்..! நீயும்- நனைந்து கொண்டுதானிருந்தாய்..! காலப்போக்கில்- உனக்கும் காதல் கருவுற்றது, இன்னொருவனுடன்..!
காதல் கவிதை ஒன்றை எழுதும் முன் ரசிக்கும் முன் அதைப் பகிரும் முன் உங்கள் மனதில் காதல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் யாரும் யாரையும் கடைசி வரை காதலிக்க தயாராக இல்லை அல்லது காதலிப்பவர்கள் யாரும் கடைசி வரை இல்லை.
இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.. 1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து கால் வலிக்க அவள் காத்திருப்பாள் 2) அவள் மீது தவறே இல்லாவிட்டாலும் உங்களுடன் சமாதானம் ஆக அடிக்கடி மன்னிப்பு கேட்பாள். 3) உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர் வடிந்தாலும் அடுத்தகனமே புன்னகையில் அதை மறைத்திடுவாள் . 4) நீங்கள் எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் மீது கொண்ட நேசம் மட்டும் குறையாமல் பார்த்துக் கொள்வாள். 5) இருவரும் விவாதிக்கும் விடயத்தில் அவள் சொல்லும் கருத்து சரியாக இருக்கும் போதிலும் விவாதத்தை தொடராமல் முடிக்கவே முயற்சி செய்வாள் உங்கள் உறவு முறிந்து போகாமல் இருக்க. 6)சிறு சிறு குறும்புகள் செய்தேனும் உங்களை சிரிக்க வைக்க முயற்சிப்பாள்.நீங்கள் அவளுக்கு எத்தனை முக்கியமானவர் என்பதை அடிக்கடி உறுதி செய்வாள். 7)நீங்கள் சந்தோசமாக இருக்கும் தருணத்தில் அவள் கவலையாக இருந்தால் , அதைப் பகிர்ந்து உங்கள் சந்தோசம் கெட்டு விடக் கூடாதென்று கவலைகளைக் கண்ணில் மறைப்பாள். 8)உங்களின் ஒரு சில முரட்டு குணங்கள் அவளை பாதித்தாலும் உங்களை விட்டு விலகும் எண்ணம் இல்லாதவளாய் இருப்பாள். 9)உங்கள் குடும்பத்திலும் நண்பர் வட்டத்திலும் நீங்கள் மதிப்போரையும் நேசிப்போரையும் அவளும் நேசிப்பாள். 10)நீங்கள் தொலைப் பேசியில் அழைக்காவிட்டாலும் அவள் அழைப்புக்கு பதிலளிக்கா விட்டாலும் , அதற்கு நீங்கள் தரும் விளக்கத்தையும் உங்கள் சூழ்நிலையையும் புரிந்துக் கொள்வாள்.
உன்னை மட்டுமே மனப்பாடம் செய்து என் வாழ்க்கை தேர்வில் தோற்றுப் போனேன் !விடையாக எதிர்பார்த்த உன்னை கேள்வியாக பார்த்ததால் !
நீ சொன்னவார்தையினால்... தவணைமுறையில் உயிர்போகிறதே!.. தாகம் இன்றி குரல் வரடுகிறதே!... என்இதயம் அழுகிறதே... என் கனவும் கலைகிறதே... இந்த ஒரு நொடி என்தன்முன் உன்பின்பம் தோன்றிமறைகிறதே.. என் உயிரே என் உயிரே... ஒருகனம் திரும்பிபாரடி ஒரு சென்மம் வாழ்திடுவேன்... ஒருமுறை உன் இதழை அசைத்துவிடு இதழ் அசையும் ஓசையிலே என் வாழ்வை வாழ்ந்திடுவேன் என் உயிரே.. என் உயிரே
தாஜ்மகால் காதலின் சின்னம் யார் சொன்னது தன் மனைவியின் பிரசவத்தை நேரில் காணும் எந்த கணவனும் அடுத்த குழந்தைக்கு தயாராக மாட்டான் பாவம் மும்தாஜ் அவளுக்கு பதினாறு பிள்ளைகள் காதலின் சின்னம் தாஜ்மகால் யார் சொன்னது உண்மையில் அது காதலின் சமாதி..!!!
நீ விட்டுச் சென்று காய்ந்து போன பூவின் வாசனையை நுகரும் போது தான் உன் பிரிவின் நிதர்சனம் நெஞ்சில் தெரிகிறது .......... உன் வார்த்தைகளால் காயம்பட்டு நொருங்கினாலும் உனக்காக உதிர்த்துக்கொண்டே இருக்கும் உன் வார்த்தைகளால் காயம்பட்டு நொருங்கினாலும் உனக்காக உதிர்த்துக்கொண்டே இருக்கும் என் இதயம் தன் காதலை ....!!!....!!!